பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam) முறை ஒரு பழங்கால இயற்கை வைத்திய முறைகளில் ஒன்று. இருந்தபோதிலும் இந்த கணினி வாழ்க்கை காலத்திலும் பல்வேறு தர பட்ட மக்களால் ஒத்துக்கொள்ள பட்டு மற்றும் பல நூறு வருடங்களாக பின்பற்றக்கூடிய வைத்திய முறையாகும். சிறு மற்றும் கொடிய வியாதிகளில் இருந்து மக்கள் தங்கள் உடல் நிலை இதன் மூலம் காத்து வருகின்றனர்.
பக்க விளைவில்லா பாரம்பரிய இயற்கை மருத்துவம் பெரும்பாலும் கருதப்படுகிறது .
இதர வைத்திய முறைகளான அலோபதி வருவதற்க்கு முன்பே பல வைத்திய முறைகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைமுறை வழக்கில் இருந்து வந்தன. அதில் முக்கியமானவைகள் சித்த மருத்துவம், தொடு கலை வைத்தியம், நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம், கை வைத்தியம், மற்றும் பாட்டி வைத்தியம். இதில் பாட்டி வைத்திய முறையானது வீட்டில் கிடைக்கும் உணவு பொருட்களில் இருந்து வியாதிகளை குணப்படுத்துவது ஓர் சிறப்பு அம்சம்.

பாட்டி வைத்தியம் பெயர் காரணம்:
பெரும்பாலும் வீடுகளில் உள்ள பெரியோர்கள் குறிப்பாக பாட்டிமார்கள், இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு சில உடனடி வைத்திய குறிப்புகளை கைவசம் வைத்திருப்பார்கள். தங்கள் குடுப்பதிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ யாருக்காவது உடம்பு சரிவரவில்லை என்றால் உடனடியாக தங்கள் கை வைத்திய முறைகளை பரித்துரைப்பார்கள். இதில் என்ன குறிப்பிட்ட விடயம் என்றால் அனைத்து மருந்துகளும் வீட்டில் உள்ள உணவு பொருட்கள் சார்ந்தே இருக்கும். வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சொல்கிற வைத்திய குறிப்புகள் பெரும்பாலும் பல வியாதிகளை குணப்படுத்துகிறது என்பது வியப்புக்குரியது.
பொதுவாக நமது நாட்டில் கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களுமே ஓர் இயற்கை மருந்துகள். இந்த உணவு பொருட்கள் மற்ற நாட்டில் விளைவதில்லை. இந்த அற்புதமான உணவே மருந்து விடயங்களும் மற்ற நாட்டினர்களுக்கு கிடைப்பதும் இல்லை. எடுத்துக்காட்டாக இஞ்சி, ஏலக்காய், மிளகு, சீரகம், இலவங்க பட்டை, மற்றும் பல அறிய வகை உணவு பொருட்கள் இயற்கை மருந்தாக நம் உடலை காத்து வருகின்றனர். இத்தகைய உணவு பொருட்கள் மற்ற நாட்டின் சீதோஷண நிலைகளுக்கு வளர்வதில்லை. உணவே மருந்து மற்றும் பாட்டி வைத்தியம் நம்முடைய நாட்டிற்கும் நம் மக்களுக்கும் கிடைத்த அறிய பொக்கிஷம்கள் ஆகும்
மேற்கத்திய பழக்கவழக்கங்களின் தாக்கம்:
வெளி நாட்டவர்களின் படையெடுப்பு மற்றும் ஆதிக்கத்தின் காரணமாக நம் நாட்டினர் மேற்கத்திய உணவு முறைகளும் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கும் அடிமைகளாகி நம்முடைய பாரம்பரியத்தை தொலைக்கும் தருவாயில் உள்ளோம். இன்றய சமுதாயம் பீசா பர்கர் என்ற மேற்கத்திய உணவு கலாசாரத்தை விரும்பிவரும் இத்தகைய சூழ்நிலையில் ஒரு சில இயற்கை ஏற்பாட்டளர்கள் நம்முடை இயற்கை மருத்துவ முறைகளை முடிந்தவரை மக்களிடம் கொண்டுசெல்கின்றனர்.
உணவே ஒரு மருந்து:
உணவே மருந்து என்ற அடிப்படையில் இயற்கையாக கிடைக்கப்பெறும் உணவு பொருட்களின் இருந்து கிடைக்கும் சக்திகளை மக்கள் அவதிப்படும் அன்றாட நோய்களில் இருந்து விடுவிப்பதே பாட்டி வைத்தியம் ஆகும், கை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியம் அனைத்துமே இந்த ஒரே நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.
வாழ்வியல் குளறுபடிகள்:
இன்றைய நவீன உலகத்தில் நேரம் இன்மை காரணமாக கிடைக்கும் உணவை உண்டு கொண்டு, சிறு முதல் கொடிய நோய்களுக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கிறோம். அடிக்கடி மனிதர்களுக்கு தொந்தரவு தரும் சளி, இருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் நோய்களுக்கு உடனடியாக அலோபதி மருந்துகளையோ அல்லது மருத்துவரையோ உடனே நாம் சந்திக்கிறோம். நம்முடைய உடம்பானது இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி கொண்டு அமையப்பெற்றுள்ளது. அத்தகைய சூழலில் நம்மை தாக்கிய சிறு சிறு நோய்களுக்கெல்லாம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை விலை கொடுத்து வாங்கி உண்பது ஓர் சாபக்கேடான விடயம்.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் இயற்கை மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாட்டி கூறிய அணைத்து வகையான கை வைத்தியங்களுக்கு உன்னத வாய்ப்பளிக்கவேண்டும்.
மாற்று மருத்துவம்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நம்முடைய உடலை பக்கவிளைவில்லா பாதுகாப்பான மருத்துவ முறையை பின்பற்றி காத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் இந்த பாரம்பரிய பாட்டி வைத்தியம் மற்றும் இயற்கை வைத்திய முறைகளை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லவேண்டும்.
எந்தந்த நோய்களுக்கு எவ்வாறு பாட்டி வைத்தியம் முறைகளை பின்பற்றவேண்டும் என்கிற அறிய தொகுப்பினை கீழ் கண்ட வாறு கொடுத்துள்ளோம். இந்த இந்த அறிய தொகுப்பில் நோய்கள் சம்பந்தமாக மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்கள்.
பாட்டி வைத்தியம் சார்ந்த இதர கேள்விகள்:
-
பாட்டி வைத்தியம் என்றால் என்ன ?
-
பாட்டி வைத்தியம் மற்றும் இயற்கை மருத்துவம் விளக்கம்?
-
பாட்டி வைத்தியம் பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?
-
பாட்டி வைத்தியம் pdf டவுன்லோட்?
-
பாட்டி வைத்தியம் இருமல் இயற்கை வைத்தியம் என்ன ?
-
பாட்டி வைத்தியம் பித்தப்பை கல் பாதிப்பு இயற்கை வைத்தியம் என்ன ?
-
பாட்டி வைத்தியம் குழந்தை வளர்ப்பு ?
-
பாட்டி வைத்தியம் அடிபட்ட வீக்கம் குறைய முறைகள் என்ன?
-
பாட்டி வைத்தியம் உடல் எடை குறைய இயற்கை வழிகள் என்ன ?
-
பாட்டி வைத்தியம் சளி இருமல் குறைய இயற்கை வழிகள் என்ன ?
-
கை வைத்தியம் என்றால் என்ன ?